Author: admin

ஒருமைப்பாடுள்ள மனிதன்” (A man of Integrity) நூல் வெளியீடு

யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை ஜோண் பப்ரிஸ்ட் அன்ரனி அவர்களின் “ஒருமைப்பாடுள்ள மனிதன்” (A man of Integrity) நூல் வெளியீடு சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். அகவொளி குடும்ப நல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. கொழும்புத்துறை…

அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இறப்பின் ஐந்தாம் ஆண்டு நினைவுப்பேருரை

யாழ். திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் ஐந்தாம் ஆண்டு நினைவாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது நினைவுப்பேருரை சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ்.…

பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்கள் ஜனாதிபதியிடம் சான்றிதழ் கடிதங்கள் கையளிப்பு

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக அண்மையில் நியமனம் பெற்ற பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் தனது சான்றிதழ் கடிதங்களை கையளித்தார். இந்நிகழ்வு சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

ஆயருடனான சந்திப்பு

யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ண அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு சித்தரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளுக்கு புதிய இயக்குநர்

இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் இயக்குநராக கண்டி மறைமாவட்ட அருட்தந்தை ரோய் கிளாரன்ஸ் அவர்கள் நியமனம்பெற்றுள்ளார். இந்நியமனம் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை அண்ட்ரே ஜொஸ்வோவிஜ் அவர்களால் சித்திரை மாதம் 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.