வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட இளம் குருக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட எம்மாவுஸ் தியானம் ஆடி மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு ஆயர் மன்ற தலைவரும் திருகோணமலை மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இத்தியானத்தை ஸ்பெயின் நாட்டிலிருந்து வருகைதந்த எம்மாவுஸ் தியான குழுவினர் நெறிப்படுத்தினர்.
இத்தியானத்தில் 48 மணித்தியால நற்கருணை எழுந்தேற்றம், நற்கருணை சந்திப்பு, குழுச்செபம், அனுபவ பகிர்வு, தியான உரைகள், ஒப்புரவு அருட்சாதனம் என்பன இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வுகள் 29ஆம் திகதி நடைபெற்றதுடன் அன்றைய தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மன்னார் மடுத்திருத்தலத்தில் திருப்பலியும் தொடர்ந்து அனுபவ பகிர்வு என்பவற்றுடன் ஆயர் மன்ற செயலாளரான யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் நன்றியுரையும் இடம்பெற்றன.
இத்தியானத்தில் நான்கு தமிழ் மறைமாவட்டங்ளையும் சேர்ந்த 50ற்கும் அதிகமான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

