திருக்குடும்ப துணை குருக்களின் சர்வதேச மாநாடு புரட்டாதி மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஆரம்பமாகி வத்திக்கான் உரோமாபுரியில் உள்ள திருக்குடும்ப சபை தலைமை இல்லத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் திருக்குடும்ப சபையின் உலகளாவிய தலைவி அருட்சகோதரி அனா மரியா மற்றும் ஆலோசகர்கள், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இத்தாலி, கொங்கோ, கமரூன், கனடா ஆகிய நாடுகளில் இருந்து 33 குருக்கள் பங்கேற்றதுடன் திருக்குடும்ப சபையின் ஏனைய அழைத்தல்களாகிய தியான ஜோக சபையினர், அப்போஸ்தலிக்க சபையினர், பொதுநிலை அங்கத்தவர்கள், மடசார்பற்ற அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டின் பொழுது திருக்குடும்ப துணை குருக்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களை சந்தித்து அவருடைய ஆசீரை பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

