அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவுநாள்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு தை 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற மாசி மாதம் 27,28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த கூட்டம் தை மாதம் 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளவாலை மறைக்கோட்ட குருக்கள் உதவி

இளவாலை மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள் இணைந்து குருநாகல் மாவட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி உதவிப்பொருட்களை மார்கழி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும்…

ஆயருடனான சந்திப்பு

இந்தியா நாட்டின் தமிழ்நாடு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு தை மாதம் 10ஆம் திகதி…

சில்லாலை பங்கு ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு

சில்லாலை பங்கில் ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு தை மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ். மறைமாவட்டத்தில்…