சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம்
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் 11ஆம் திகதி புதன்கிழமை வேலனை தெற்கு பிரதேச செயலகத்தில்…
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரி புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரியின் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை கடந்த மாதம் 23,24ஆம் திகதிகளில் நடைபெற்றது. இப்பரீட்சைக்கு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து ஏழு மாணவர்கள் தோற்றியதுடன் அவர்கள் அனைவரும் சித்தியடைந்து களுத்துறை…
தேசிய மறையாசிரியர் தேர்வு
தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் தேர்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாளைய தினம் நடைபெறவுள்ளதென யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார். முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு…
மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து வலைப்பாடு பங்கில் முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை…
மண்டைதீவு றோ.க வித்தியாலய மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் புதிய சமையலறை திறப்புவிழாவும் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. வித்தியாலய அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20 மாணவர்கள் மாணவத்தலைவர்களாக சின்னம்சூட்டி…