அருட்திரு ஜேம்ஸ் கத்தோலிக்க சமய ஆலோசனை சபையின் அங்கத்தவராக நியமனம்

சிறந்த விழுமியங்கள் கொண்ட நேர் மனப்பாங்கு விருத்தியடைந்த பிள்ளைகளை பாடசாலை முறைமையிலிருந்து சமூகத்திற்கு வழங்குவது கல்வி அமைச்சின் மேலான எதிர்பார்ப்பாகும். இந்நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக அனைத்து சமயங்களுக்குமுரிய சமயக்கல்வி நடவடிக்கைளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த நிபுணத்துவம் வாய்ந்த சமய ஆலோசனை குழு ஒன்று தேசியரீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

Continue reading அருட்திரு ஜேம்ஸ் கத்தோலிக்க சமய ஆலோசனை சபையின் அங்கத்தவராக நியமனம்

பேராசிரியர் அருட்கலாநிதி ஞானமுத்து விகடர் பிலேந்திரன்-வாழ் நாள் பேராசிரியர்

2020 க.பொ.த. ( உ / த ) கிறிஸ்தவ நாகரிக மதிப்பீட்டுப் பணியில் பாட இணைப்பாளராகவும் பிரதம பரிட்சகராகவும் கடமையாற்றிய பேராசிரியர் அருட்கலாநிதி ஞானமுத்து விகடர் பிலேந்திரன் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ் நாள் பேராசிரியராக தெரிவு செய்யப்பட்டமையை கௌரவிக்கும் நிகழ்வு 02.01.2021 சனிக்கிழமை நடைபெற்றது.

Continue reading பேராசிரியர் அருட்கலாநிதி ஞானமுத்து விகடர் பிலேந்திரன்-வாழ் நாள் பேராசிரியர்

அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் புனித அற்புத மாத திருச்சுருபம்

08.12.2020 செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில், யாழ் போதனா வைத்தியசாலை வீதி பக்கமாக அமைந்திருந்த புனித அற்புத மாத திருச்சுருபம் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்திரு அன்ரனிதாஸ் அவர்களின் வழிகாட்டலில் அழகிய தோற்றத்துடன் புனரமைப்பு செய்யப்பட்டு காட்சி தரும் அன்னையின் திருச்சுருபம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு அன்னையின் அமலோற்பவ பெருவிழாவாகிய இன்றைய தினத்தில் நடைபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Continue reading அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் புனித அற்புத மாத திருச்சுருபம்

புதுபொலிவுடன் புனித வளனார் மூதாளர் காப்பகம்

கொழும்புத்துறை புனித வளனார் மூதாளர் காப்பக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிர்வாக கட்டடத்தொகுதி 28.11.2020 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகம் அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத் தொகுதி ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் நிதி அனுசரணையுடன் அழகிய தேற்றத்துடன் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வளாகத்தில் அமையப்பெறவுள்ள மூதாளர் தங்குமிட கட்டடத் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம் பெற்றது.

Continue reading புதுபொலிவுடன் புனித வளனார் மூதாளர் காப்பகம்

ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாள்

யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாளாகிய இன்று (28.11.2020 சனிக்கிழமை) ஆயர் அவர்களின் தலைமையில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Continue reading ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாள்

யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் (Council) புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன்

யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் ( Council )புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் நியமனம் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகள் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள் தலைவரும், வாழ் நாள் பேராசிரியருமான அருட்பணி ஞானமுத்து பிலேந்திரன், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக பல்கலைக கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Continue reading யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் (Council) புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன்

புதுப்பொலிவுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம்

15.11.2020 ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களினால், புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.புனித மடுத்தினார் குருமடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது குருமடம்.

Continue reading புதுப்பொலிவுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கு இணைய (Online) வழியில் வருடாந்த தியானம்.

தற்போதைய தனித்திருத்தல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற சூழ்நிலை காரணமாக யாழ். மறைவட்ட குருக்களின் வருடாந்த தியானம் இம்முறை இணைய வழியில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்டத்தின் 110 குருக்கள் தத்தம் பணித்தளங்களில் இருந்தவறே பங்கு கொண்ட இத்தியானம் நவம்பர் 9ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.

Continue reading யாழ். மறைமாவட்ட குருக்களுக்கு இணைய (Online) வழியில் வருடாந்த தியானம்.

இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்

சக்கோட்டை பங்கு இளையோர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இன்று “இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மரம் நாட்டுதல் நிகழ்வு காலை திருப்பலியை தொடர்ந்து சாக்கோட்டை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்பணி.J.பிரான்சிஸ் அடிகளாரின் தலைமை யில் நடைபெற்ற. இந்நிகழ்வில் 20ற்கு மேற்பட்ட பயன்தரு மரங்கள் இளையோர் மன்றத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நாட்டப்பட்டன.

Continue reading இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்

‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க விசேட வழிபாடு

‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க ஆண்டவரின் அருள் வேண்டி செபிக்கும் விசேட திருப்பலி 24.10.2020 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Continue reading ‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க விசேட வழிபாடு