யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை ஜோண் பப்ரிஸ்ட் அன்ரனி அவர்களின் “ஒருமைப்பாடுள்ள மனிதன்” (A man of Integrity) நூல் வெளியீடு சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். அகவொளி குடும்ப நல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான மதிப்பீட்டுரையை அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். மறைமாவட்டத்தின் முந்நாள் ஆயர் பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் ஆற்றிய பணியையும் வெளிக்கொணர்வதாக இந்நூல் அமைந்துள்ளது.

