யாழ். திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் ஐந்தாம் ஆண்டு நினைவாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது நினைவுப்பேருரை சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுப் பேருரை நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் கலந்து “கத்தோலிக்க திருஅவையின் பார்வையில் பண்பாடும் கலை இலக்கியங்களும் – இரண்டாம் வத்திக்கான சங்கத்திற்கு பின்னர் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்கள்” என்னும் தலைப்பில் பேருரையை வழங்கினார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், தமிழ் ஆர்வலர்கள், மன்ற அங்கத்தவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

