திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக அண்மையில் நியமனம் பெற்ற பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் தனது சான்றிதழ் கடிதங்களை கையளித்தார்.

இந்நிகழ்வு சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1965ஆம் ஆண்டு தை மாதம் 14ஆம் திகதி போலந்து நாட்டில் பிறந்த பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்கள் 1990ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு வத்திக்கான் தூதரக சேவையில் இணைந்தார்.

இவர் 2017 முதல் 2021 வரை ருவாண்டாவிலும், 2021 முதல் தற்போது வரை ஈரானிலும் திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.

By admin