2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டதுடன் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.
அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இறைமக்களென பலரும் இந்நிகழ்வில் கலந்து இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.

