யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
அருட்தந்தை சேவியர் பேணாட் றெக்னோ அவர்கள் இளவாலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை செபஸ்ரியன் எஸ்தாகு அவர்கள் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அரசரட்ணம் எரிக் றொசான் அவர்கள் முகமாலை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய பங்குத்தந்தையாகவும் யாழ். குடாநாட்டில் மறைமாவட்டத்திற்கு சொந்தமான தோட்டங்களுக்கு பொறுப்பாளராகவும் அருட்தந்தை மரிய பற்றிக் ஆனந்தகுமார் அவர்கள் சில்லாலை பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்கள் குருநகர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்கள் தீவக மறைக்கோட்ட முதல்வர் மற்றும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்கள் மானிப்பாய் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அலோய் அருணேஸ்குமார் அவர்கள் மண்டைதீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பீற்றர் அமலதாஸ் கமல்ராஜ் அவர்கள் நெடுந்தீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்கள் எழுவைதீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை தோமையப்பு யேசுதாசன் அவர்கள் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி உருவாக்குநராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
அத்துடன் அருட்தந்தை சத்தியசீலன் யூட் கமில்ரன் அவர்கள் முல்லைத்தீவு பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை யேசுரட்ணம் அன்ரன் கஜீஸ்காந்த் அவர்கள் பருத்தித்துறை பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்கள் மாங்குளம் பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஜோண் பிலிப் ஜோண் எமில்ரன் அவர்கள் குருநகர் பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஜோண்சன் ஜோண் கில்ரன் அவர்கள் பேராலய உதவிப் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஸ்ரனிஸ்லொஸ் ஸ்ரீபன்ராஜ் அவர்கள் நாவாந்துறை பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
