வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு நிலையிலுள்ள ஆயர்கள் மற்றும் மூத்த குருக்களை கௌரவித்து அவர்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை “வியான்னி” ஓய்வுநிலை குருக்கள் இல்லத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து ஆயர்கள் மற்றும் குருக்களுக்கான கௌரவிப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மறைமாவட்டங்களின் மூத்த குருக்கள் மற்றும் ஒய்வுநிலை ஆயர்களோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மற்றும் நான்கு மறைமாவட்டங்களின் குருமுதல்வர்களும் கலந்துகொண்டனர்.

By admin