Author: admin

சுன்னாகம் பங்கில் வீதி சிலுவைப்பாதை தியானம்

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் சுன்னாகம் புனித அந்தோனியர் ஆலயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்தின் ஊடாக…

சாவகச்சேரி மற்றும் அக்கராயன் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை

சாவகச்சேரி மற்றும் அக்கராயன் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை ஞானேந்திரன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் வவுனியா கோமரசன்குளம் கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு…

திருவுள சபை திருவிழா

யாழ்ப்பாணம் திருவுள சபை அங்கத்தவர்கள் இணைந்து முன்னெடுத்த திருவுள சபை திருவிழா பங்குனி மாதம் 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்புத்துறை திருவுள சபை சிறிய குருமடத்தில் குருமட அதிபர் அருட்தந்தை மரியசெல்வன் பிராங் டவ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருவிழா…

பல்லவராயன்கட்டு ஆங்கிலப் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு ஆங்கிலப் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி பங்குனி மாதம் 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் மாணவர்கள் ஒக்ஸ்போர்ட், ஸ்ரான்போர்ட், ஹவார்ட், கேம்பிரிட்ஜ் என நான்கு இல்லங்களாக…

புங்குடுதீவு பங்கு மறைப்பாடசாலை மாணவர்களின் காட்சி சிலுவைப்பாதை தியானம்

புங்குடுதீவு பங்கு மறைப்பாடசாலை மாணவர்களின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 27ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கரந்தலி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் மறைக்கல்வி மாணவர்களால் “இயேசுவின் கல்வாரிப்பாடுகள்”…