யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி ஓய்வுநிலையிலுள்ள மறைமாவட்ட மூத்த குருக்களை கௌரவித்து இளம் குருக்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி, உருத்திரபுரம் ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து மூத்த குருக்களுக்கான கௌரவிப்பும் அவர்களின் அனுபவ பகிர்வும்; இடம்பெற்றன.
கௌரவிப்பு நிகழ்வில் பேரருட்தந்தை தோமஸ் சவுந்தரநாயகம், அருட்தந்தையர்கள் தேவராஜன், இருதயதாஸ்;, தேவசகாயம், மொண்பேர்ட், ஜெயசீலன், றெஜி இராஜேஸ்வரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

