சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நினைவை முன்னிறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘பொதுநினைவேந்தல் நாள் ஜுலை – 25’ நிகழ்வு ஆடி மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. கோமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தமிழர் வரலாற்றில் இரத்தக்கறைபடிந்த கறுப்பு ஜுலை இனப்படுகொலை நினைவுகளை மீட்டி, மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டம் எனும் சிந்தனையோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அஞ்சலியும், நினைவுரைகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கைதிகளின் பெற்றோர், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

