வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 16, 18, 20 வயதிற்குட்பட்ட அணியினருக்கான காற்பந்தாட்டப் போட்டிகள் ஆனி மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன.
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மற்றும் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானங்களில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியின் இறுதியாட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி உடுப்பிட்டி அமெரிக்க மிஸன் கல்லூரியை 02:00 என்ற கோல்கணக்கில் வென்று வட மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அத்துடன் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்ற 18 வயதிற்குட்பட்டோருக்கான இறுதியாட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணியை மன்னார் சென் சேவியர்ஸ் கல்லூரி அணி 02:00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்ற நிலையில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி இரண்டாம் இடத்தைப் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியது.
மேலும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் யூனியன் கல்லூரி மைதானங்களில் நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டோருக்கான மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி இளவாலை புனித ஹன்றியரசர் கல்லூரி அணியை 02:00 என்ற கோல்கணக்கில் வென்று மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது.

