புதிதாக அமைக்கப்பட்டுவந்த உடையார்கட்டு, சுதந்திரபுரம் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும் ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்கின் புனித யூதாததேயு மறைப்பாடசாலை பாண்ட் வாத்தியக்குழுவினரின் அணிவகுப்புடன் ஆலய முன் வீதியிலிருந்து ஆலய வளாகத்திற்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் அழைத்துவரப்பட்டார்.

தொடர்ந்து ஆயர் அவர்கள் அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருந்த புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin