கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை ஆனைக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாரந்தனை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin