Month: July 2026

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு அருணோதய மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் ஆறு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் 45 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 02 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை

பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல துணைப்பங்கான வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். கொழும்புத்துறை உயர்…

சூராவத்தை புனித திரேசாள் ஆலய ஆசையப்பா ஞாபகார்த்த ஜொனியன்ஸ் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு

சுன்னாகம், சூராவத்தை புனித திரேசாள் ஆலய ஆசையப்பா ஞாபகார்த்த ஜொனியன்ஸ் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித திரேசாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி நிர்வாகத்தினரின்…

வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான ‘மகத்தான மானுடம்’ என்ற சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம்’ என்ற சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிருஸாந்த்…