மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin