யாழ்ப்பானம் புனித வளனார் அச்சகத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட புத்தகம் கட்டும் இயந்திரம், சுருள் பிணைப்பு இயந்திரம் மற்றும் ஸ்டிக்கர் வெட்டும் இயந்திரம் ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆடி மாதம் 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அச்சக முகாமையாளர் அருட்தந்தை எயின்ஸ்சிலி றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து இயந்திரங்களை ஆசீர்வதித்து அவற்றின் செயற்பாடுகளை ஆரம்பித்துவைத்தார்.

By admin