யாழ். மறைமாவட்ட குருவும் புனித வளனார் அச்சக முகாமையாளரும் பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியருமான அருட்தந்தை செபஸ்தியாம்பிள்ளை எயின்சிலி றொசான் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆடி மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை ஆனைக்கோட்டை புனித அடைக்கல நாயகி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
ஆனைக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் திருப்பலி நிறைவில் அருட்தந்தைக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
தொடர்ந்து அருட்தந்தையின் குருத்துவ யூபிலி தினத்தை நினைவுகூர்ந்து பங்குமக்களால் “ஆனையூர் அருள் மகன்” வெள்ளிவிழா மலரும் பாதுகாவலன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களை தாங்கிய “உண்மையின் உரைகல்” தொகுப்பு நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், குருக்கள், துறவிகள், இறைமக்கள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

