யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்ட்ட “கலைச்சாரல்” நிகழ்வு ஆனி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் நடனங்கள், மெல்லிசை, வீணை இசை என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக திருமறைக் கலாமன்ற கலைஞர்களால் மஹாகவியின் ‘புதியதொரு வீடு’ நாடகமும் மேடையேற்றப்பட்டது.

யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி உமாகாந்தன் சிவகாமி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin