தர்மபுரம் பங்கின் விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் யாழ். மறைமாவட்ட ஆயர் மற்றும் பங்கு மக்களின் நிதியனுசரணையில் புதிதாக அமைக்கப்பட்ட திருப்பொருள் அறையும் பங்கு பணிமனையும் குருமுதல்வர் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

