இறைழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்ட திருப்பாலத்துவ சபையின் ஏற்பாட்டில் மறைமாவட்ட பங்குகள் மற்றும் துறவற சபைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட “யாரை அனுப்புவேன்” கண்காட்சி ஆனி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றது.

மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குநர் அருட்தந்தை யூட் சர்வானந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

இக்கண்காட்சியில் சிறார்கள் மற்றும் துறவற சபையினரால் இறையழைத்தல் பற்றிய இறைவார்த்தைகள், கதைகள், வரலாறுகள், என்பவற்றுடன் இறையழைத்தல் பற்றிய குறு நாடகங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கண்காட்சியை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் பார்வையிட்டனர்.

By admin