தலைமைத்துவக் கருத்தரங்கு

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தை சேர்ந்த இளையோர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.

புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினரின் தமிழ் விழா

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்ரம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம்

போர்டோவின் திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை இளவாலை திருக்குடும்ப கன்னியர் இல்லத்தில் நடைபெற்றது.