கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நற்கருணை பவனி சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயம், குருநகர் புனித யாகப்பர் ஆலயம் ஊடாக யாழ். புனித மரியன்னை பேராலயத்தை சென்றடைந்தது.
இப்பேரணி சென்ற ஆலயங்களில் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள், மறைக்கோட்ட இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

