Category: What’s New

அருட்சகோதரி மேரி நிறோஜினி அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு

செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரி மேரி நிறோஜினி அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை பரந்தன் செபமாலை கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 03 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டு கழக பளுதூக்கல் போட்டி

பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டு கழகத்தின் மறைந்த கழக வீரர்களின் நினைவாக மாகாண ரீதியாக முன்னெடுக்கப்பட்ட பளுதூக்கல் போட்டி புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியால மாணவர்களான செல்வி எனிட்ரோஸ் பெண்களுக்கான…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம்…

இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்ணோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி…