மணற்காடு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு புனித யோசேவாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மரதன் மற்றும் சைக்கிள் ஓட்ட போட்டிகள் ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டிகள் அம்பன் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி மணக்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நிறைவடைந்ததுடன் இப்போட்டிகளில் 27 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin