மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திருவிழாவின்போது மடுத்திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு, மின்சாரம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை, திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினரென பலரும் கலந்துகொண்டனர்.
இம்மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆடி மாதம் 02ஆம் திகதி காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளதுடன் திருநாள் திருப்பலியை மறைமாவட்டங்களின் ஆயர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

