யாழ். மறைக்கோட்ட அன்பிய செயற்குழு கூட்டம் ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளரும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையுமான அருட்தந்தை எமில்ரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய செயற்குழு தெரிவு இடம்பெற்றதுடன் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

செயற்குழு தெரிவில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தை சேர்ந்த திருமதி லிகோறியன் யஸ்மின் அவர்கள் செயலாளராகவும் சுண்டுக்குளி பங்கைச் சேர்ந்த திருமதி. ஞானசேகரம் கலாதேவி அவர்கள் உப செயலாளராகவும் சுண்டுக்குளி பங்கைச் சேர்ந்த திருமதி. டெய்சி தவராஜா அவர்கள் பொருளாளராகவும் பேராலய பங்கை சேர்ந்த திருமதி. பிரேமா தேவராசா அவர்கள் ஊடக உதவியாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் மற்றும் தீவக மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை லியான்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin