வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீச்சல் போட்டி ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் கணேஸ்வரன் 100 மீற்றர் Freestyle நீச்சல் போட்டியில் இரண்டாமிடத்திற்கான வெள்ளிப் பதக்கத்தையும் செல்வன் பிறிந்ராஜ் 100 மற்றும் 200 மீற்றர் Breast stroke நீச்சல் போட்டியில் மூன்றாமிடத்திற்கான வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டதுடன் 4 ஓ 50 மீற்றர் Medley Relay போட்டியில் கல்லூரி அணியினர் இரண்டாமித்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

By admin