VAROD புதிய இயக்குநராக கிளறேசியன் சபை அருட்தந்தை எவரெஸ்ட் டயஸ்

இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமைய, புதிய இயக்குநராக கிளறேசியன் சபை அருட்தந்தை எவரெஸ்ட் டயஸ் அவர்களும் நிதி பொறுப்பாளராக கிளறேசியன் சபை அருட்தந்தை ரொரன்சன் அவர்களும் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். இவர்கள்…

கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி

ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் அவர்களின் சித்திரங்களை உள்ளடக்கிய கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி ஆவணி மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி புரட்டாதி மாதம் 01ஆம் திகதி வரை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய…

புங்குடுதீவு பங்கில் அன்பிய மாத இறுதிநாள் சிறப்பு நிகழ்வு

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மாத இறுதிநாள் சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர்கள் ஹிலன ரஸ்மிக்க பெரேரா மற்றும் ஆனந்தராஜ் அவர்களின் உதவியுடன்…

புனித அன்னை திரேசா திருவிழா

கோப்பாய் புனித அன்னை திரேசா கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித அன்னை திரேசா திருவிழா புரட்டாதி மாதம் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 02 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.