அருட்சகோதரி றோசலின் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருட்சகோதரி றோசலின் அவர்கள் 03ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருட்சகோதரி றோசலின் அவர்கள் 03ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
https://youtu.be/jl95zfquuPU
திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் கலைத்தூது அருட்கலாநிதி அமரர் நீ. மரிய சேவியர் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவின் பல்வேறு நிகழ்வுகள் 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை உள்நட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவு நிகழ்வுகள் 02ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெனான்டோ அவர்களின் தலைமையில் நினைவுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இலங்கை பிரதமர் யாழ் குடாநாட்டிற்கு மார்ச் மாதம் 20ஆம் திகதி வந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் குறிப்பாகப் பெண்கள் தமது எதிர்பைச் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்த முயன்ற போது பொலீசாரினால் தாக்கப்பட்டமையும் அநாகரீகமாக நடத்தப்பட்டமையும் வன்மையாகக் கண்டித்து யாழ் கத்தோலிக்க…