திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

