யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் நடைபெற்றது.

கோப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்புக்கள், உளவியல் ஆற்றுப்படுத்தல், சிறப்பு வழிபாடுகள், திருப்பலி என்பன நடைபெற்றன.

இவ் ஆற்றுப்படுத்தல் நிகழ்வை அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட், திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் றாஜி ஸ்ரான்லி அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரிகள் நீற்றா அந்தோனிப்பிள்ளை, வலன்ரீனா, டெனற், நிறோஸா மற்றும் நவகன்னி சகோதரி கொறற்றி ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.

இறுதிநாளன்று மாலை, அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும், திருப்பலி நிறைவில் தொலைபேசி பாவனை தொடர்பான விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தலும் அனுபவ பகிர்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், அருட்சகோதரிகள் 120 குடும்பங்கள் தரிசித்து, குடும்பங்களில் நிலவும் போதைப்பொருள் பாவனை, திருமண உறவுச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி அருட்சாதனங்களின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தனர்.

By admin