தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 2026 உலக மாஸ்டர்ஸ் தடகளச் சம்பியன்சிப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற யாழ்ப்பாணம் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தை சேர்ந்த நற்கருணை பணியாளர் திரு. மரியகருணைநாயகம் பேரின்பநாயகம் அவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளார்.
75 முதல் 79 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிட்ட இவர், 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 19ஆம் இடத்தையும், 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 16ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இச்சர்வதேசப் போட்டியில் 109 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

