யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக நல்லாயன் மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி டினேஸ் கூஞ்ஞ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா ரொறென்றோ பல்கலைக்கழக பேராசிரியர் அருட்தந்தை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து ‘கிறிஸ்தவ மருத்துவமும் அறவியல் எதிர்நோக்கும் சவால்களும்’ என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ், மருத்துவர்கள், மருத்துவ பீட மாணவர்கள், தாதியர்களென பலரும் கலந்து பயனடைந்தனர்.

By admin