மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரியகல்லாறு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ரெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை ஜெரிஸ்ரன் வின்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin