மருதனார்மடம் “கிறிஸ்த சேவ” ஆச்சிரமம் ஆரம்பிக்கப்பட்டதன் 87ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு ஆவணி மாதம் 21,22ஆம் திகதிகளில் நடைபெற்றது.

ஆச்சிரம தலைவர் ஜெறோம் அண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் ஞானொடுக்கமும் ஆச்சிரம நிறுவுனர் தினமும் நடைபெற்றன.

இரண்டாம் நாளன்று காலை அங்கிலிக்கன் சபை அருட்பணியாளர் அருளம்பலம் ஸ்ரீபன் அவர்களின் ஆச்சிரம வரலாறு பற்றிய விரிவுரையும் தொடர்ந்து மாலை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த அருட்பணியாளர்களும் இறைமக்களும் கலந்துகொண்டனர்.

By admin