தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இளையோர் முகாம் புரட்டாதி மாதம் 04ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள லீவை ஸ்போல்டிங் ஆதீன கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்தியா நாட்டின் கன்னியாகுமாரி ஆதீனத்தின் வழிநடத்தலில் ‘தோழா எதற்காக வந்தாய்’ என்னும் கருப்பொருளில் இடம்பெற்றுவரும் இம்முகாமை கன்னியாகுமாரி ஆதீன பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

முதல்நாள் ஆன்மீக விழிப்புணர்வு அமர்வுகள், ஆடல் பாடல், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் அவர் தலைமையிலான குழுவினரின் சமூக தொடர்பாடல் தொடர்பாக கருத்துரையும் விளையாட்டுக்களும், அருட்பணி லோரன்ஸ் அவர்களின் ஆன்மீக கருத்தமர்வும் இடம்பெற்றன.

இம்முகாமில் மட்டக்களப்பு, கொழும்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த 93 இளையோர் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளனர்.

By admin