அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து “தாத்தா – பாட்டியரோடு மகிழ்ந்திருக்கும் தருணம்” சிறப்பு நிகழ்வும் நடைபெற்றது.

திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலியின் போது தாத்தா – பாட்டியர்கள் தங்களுடைய பேரப்பிள்ளைகளால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

திருப்பலி நிறைவில் அருட்சகோதரன் ஜேசுதாசன் அவர்களின் தலைமையில் “தாத்தா – பாட்டியரோடு மகிழ்ந்திருக்கும் தருணம்” நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேரப்பிள்ளைகள் பெற்றோரின் கலை நிகழ்வுகள், தாத்தா – பாட்டியர்களின் பங்கேற்புடனான நிகழ்வுகள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.

By admin