ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பதுளை மறைமாவட்டத்திலிருந்து வருகைதந்த மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஐவன் றொட்ரிக்கோ மற்றும் இணைப்பாளர் செல்வன் அல்வீனஸ் ஆகியோர் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் இடம்பெற்ற பயிற்சிகளில் பங்குபற்றினர்.

ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒளி, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, சமூகவலைத்தள நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி வாசிப்பு, ஊடக தொழில்நுட்ப செயற்பாடுகள், நேரடி ஒலிபரப்பு, செய்தி உருவாக்கம், செய்தி வாசிப்பு போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

By admin