மாரீசன்கூடல் வாழ்வக பிரதேகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மடுமாதா ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும் ஆடி மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

ஆலய திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் 25ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

மன்னார் மடுத்திருத்தலத்தின் தோற்றத்ததுடன் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்திற்கான அடிக்கல் 2019 ஆடி மாதம் 06ஆம் திகதி அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை டினேஸன் அவர்களின் பணிக்காலத்தில் நாட்டப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் பணிக்காலத்தில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கபட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் பணிக்காலத்தில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து திறந்துவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin