திருக்குடும்ப கன்னியர் சபை ஸ்தாபகர் பீற்றர் பியன்வெனு நோஆய் அவர்களின் பெயர்கொண்ட விழா ஆனி மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்றது.
அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனித அன்னாள் ஆலயத்தில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து மானிப்பாய் திருக்குடும்ப இல்லத்தில் ஒன்றுகூடலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருக்குடும்ப அருட்சகோதரிகள், பொதுநிலை அங்கத்தவர்கள், இளையோர் மற்றும் பிள்ளைகள் கலந்துகொண்டனர்.

