நெடுந்தீவு பங்கு இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல் ஆடி மாதம் 04,05ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் செபமாலை பவனி, ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை ஆராதனை, தலைமைத்துவ பயிற்சி, தீப்பாசறை என்பன இடம்பெற்றன.

05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து சமூக தொடர்பாடல் சாதனங்களின் பாவனையால் இளையோர் எதிர்நோக்கும் சாதக பாதக விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வும் இடம்பெற்றன.

தலைமைத்துவ பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தமர்வை இளையோர் ஆணைக்குழு வளவாளர்கள் நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 70 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin