யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆடி மாதம் 11ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் மற்றும் அருட்தந்தை நிலான் யூலியஸ் ஆகியோர் இணைந்து அன்பிய ஏழு படிமுறை தொடர்பாகவும் அன்பிய வாழ்வு தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினர்.

தொடர்ந்து மறைக்கோட்ட செயற்குழு மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் குழு தெரிவும் இடம்பெற்றது.
செயற்குழு தெரிவில் சாவகச்சேரி பங்கை சேர்ந்த திருமதி ஜாக்குலின் பிவேமிக்னஸ் அவர்கள் செயலாளராகவும் கரவெட்டி பங்கைச் சேர்ந்த திருமதி இருதயயூலி அவர்கள் பொருளாளராகவும் ஒட்டகப்புலம் பங்கைச் சேர்ந்த திருமதி. நிரோஸா அவர்கள் உப செயலாளராகவும் செம்பியன்பற்று – தாளையடி பங்கை சேர்ந்த திரு. மரியரொசான் அவர்கள் ஊடக உதவியாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 72 அன்பிய ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin