இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனராக அண்மையில் நியமனம்பெற்ற கண்டி மறைமாவட்ட அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
கொழும்பு பொறளை பல்கம் பிளேஸ் சதாசகாய அன்னை சிற்றாலயத்தில் இலங்கை தேசிய பாப்பிறை மறைபரப்பு சபைகளுக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை வலன்ஸ் மென்டிஸ் அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அருட்தந்தை நாயகம் றோய் கிளாரன்ஸ் அவர்களுக்கான இந்நியமனம் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை அண்ட்ரே ஜொஸ்வோவிஜ் அவர்களால் சித்திரை மாதம் 24ஆம் திகதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

