வசாவிளான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரிகளின் தலைமை காரியாலய திறப்புவிழா ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
அருட்சகோதரி ஹெலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து காரியாலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

