வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் பூநகரி புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முன்பள்ளி கட்டட திறப்புவிழா ஆனி மாதம் 30ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து முன்பள்ளி கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார், வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன், நிறுவன பணியாளர்கள் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கட்டடத்திற்கான நிதியனுசரணையை நெதர்லாந்து நாட்டின் ACNS நிறுவனம் வழங்கியிருந்தது.
போரின் பின்னரான மீள்குடியேற்ற காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்பள்ளி பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் 17 முன்பள்ளிகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் 03 முன்பள்ளிகள் புனரமைப்பு செய்யப்பட்டு 02 விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
